ஜப்பானில் பேரழிவை ஏற்படுத்திய சுனாமி ஏற்பட்டு இன்றுடன் 13 ஆண்டுகள்!
மார்ச் 11, 2011 அன்று ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையின் சில பகுதிகளில் 9.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதுடன், சுனாமியும் ஏற்பட்டது.
இந்நிலையில் இந்நிகழ்வு இடம்பெற்று இன்றுடன் (11.03) 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு ஜப்பான் மக்கள் மௌன அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
குறித்த சுனாமியால் ஃபுகுஷிமா மாகாணங்களில் சுமார் 20,000 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
நாடோரி நகரில், சுமார் 400 பேர் பிரார்த்தனை செய்து, துயரச் செய்திகளை ஏந்திய பலூன்களை வெளியிட்டனர்.





