உலகம் செய்தி

எப்போது வேண்டுமானாலும் அது நடக்கலாம்… புடின் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு நாடுகள் முழு அளவிலான போரின் விளிம்பில் இருப்பதாக BRICS உச்சிமாநாட்டில் உரையாற்றிய ரஷ்ய ஜனாதிபதி புடின் எச்சரித்துள்ளார்.

காஸாவில் ஓராண்டுக்கு முன் தொடங்கிய ராணுவ நடவடிக்கை தற்போது லெபனான் வரை பரவியுள்ளது.

இதனால் பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கசானில் பல உலகத் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் புடின் கூறியுள்ளார்.

மேலும், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் நிலை இறுக்கமடைந்துள்ளது.

இது முழு மத்திய கிழக்கையும் முழு அளவிலான போரின் விளிம்பிற்கு கொண்டு சென்றுள்ளது என்றார்.

சுதந்திர பாலஸ்தீன நாடு உருவாகும் வரை மத்திய கிழக்கில் வன்முறைகள் ஓயாது என்றும் BRICS உச்சிமாநாட்டில் புடின் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

குறித்த மாநாட்டில் பாலஸ்தீன தலைவர் மஹ்மூத் அப்பாஸ் கலந்து கொண்டுள்ளார்.

பாலஸ்தீனப் பகுதிகளில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான முக்கிய கோரிக்கை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பொதுச் சபையால் அங்கீகரிக்கப்பட்ட இரு நாடுகளின் கொள்கையை செயல்படுத்துவதாகும் என்றும் புடின் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு பாலஸ்தீன மக்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்று அநீதியை சரி செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சூழ்நிலைக்கு தீர்வு காணும் வரை, வன்முறையின் கொட்டத்தை அடக்க முடியாது என்றும் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!