‘செமி கிரையோஜெனிக் என்ஜின் சோதனையை ஆரம்பித்தது இஸ்ரோ நிறுவனம்!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதன் ‘செமி கிரையோஜெனிக் என்ஜின்’ (semi cryogenic) சோதனையை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.
இது எதிர்கால ஏவுகணைகளுக்கு சக்தி அளிப்பதாக இருக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ வளாகத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட செமி கிரையோஜெனிக் ஒருங்கிணைந்த இயந்திரம் மற்றும் நிலை சோதனைக்கூடத்தில் புதன்கிழமை (10) மேற்கொள்ளப்பட்ட அரை கிரையோஜெனிக் இயந்திரத்தின் இடைநிலை கட்டமைப்பின் முதல் ஒருங்கிணைந்த சோதனை வெற்றிகரமாக முடிந்தது.
எதிர்கால ஏவுகணை தளங்களுக்கு பயன்படக்கூடிய திரவ ஒட்சிசன், மண்ணெண்ணெய் உந்துசக்தி கலவையினால் செயற்படும் இயந்திரத்தை உருவாக்குவதற்கான ஒரு படியாக இந்த சோதனை அமைந்துள்ளது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
(Visited 4 times, 1 visits today)