இஸ்ரேலின் புதிய திட்டங்கள் இரத்தக்களரியை மட்டுமே ஏற்படுத்தும் – ஸ்டார்மர்!

காசா நகரத்தைக் கைப்பற்ற இஸ்ரேலின் திட்டங்கள் “தவறானவை” என்றும் “இன்னும் இரத்தக்களரியை மட்டுமே ஏற்படுத்தும்” என்றும் பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.
காசாவை கைப்பற்றுவதற்கான திட்டங்களுக்கு இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் ஸ்டாமரின் கருத்துக்கள் வந்துள்ளன.
இந்நிலையில் “காசாவில் அதன் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தும்” முடிவை உடனடியாக மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமர் இஸ்ரேலிய அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
இந்த நடவடிக்கை இராணுவத் தலைமை மற்றும் காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து எச்சரிக்கைகளையும் தூண்டியுள்ளது.
இந்த தாக்குதல் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பப்படும் 20 கைதிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.
“நமக்குத் தேவையானது ஒரு போர்நிறுத்தம், மனிதாபிமான உதவிகளில் அதிகரிப்பு, ஹமாஸால் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவித்தல் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது. காசாவின் எதிர்காலத்தில் ஹமாஸ் எந்தப் பங்கையும் வகிக்க முடியாது, மேலும் அவர்கள் வெளியேற வேண்டும், அதே போல் ஆயுதங்களைக் களைய வேண்டும்” எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.