ஈரானுடனான போரினால் இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ள நன்மை

12 நாளாக ஈரானுடன் நடந்த போர் இஸ்ரேலுக்குப் புதிய வாய்ப்புகளை அமைத்துத் தந்திருப்பதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதியன்று பாலஸ்தீனக் கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலைத் தாக்கி அவர்கள் பிடித்துவைத்திருக்கும் பிணையாளிகளைத் திரும்பப் பெறும் சாத்தியம் அதில் முதன்மையானது என்று அவர் கருத்துரைத்தார்.
இதற்கிடையே, பெஞ்சமின் நெதன்யாகுவின் ஊழல் குற்றவழக்கில் அவர் தமது வாக்குமூலத்தை வழங்குவதை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்த இரண்டு காரணங்களாலும், காஸாவில் நீண்ட நாளாகத் தொடரும் சண்டை முடிவுக்கு வரக்கூடும், பிணையாளிகள் விடுவிக்கப்படக்கூடும் என்ற நம்பிக்கை உண்டாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
(Visited 8 times, 8 visits today)