உடைமைகளை அப்படியே விட்டுவிட்டு வெளியேறிய இஸ்ரேலியர்கள்

இஸ்ரேலியர்கள் உடைமைகளை அப்படியே விட்டுவிட்டு வெளியேறியுள்ளனர்.
ஹமாஸ் படையினர் தாக்குதலுக்கு அஞ்சி தெற்கு இஸ்ரேலில் உள்ள ஸ்டரேட் நகரில் ஒட்டு மொத்த மக்களும் வெளியேறிவிட்டதால் அந்நகரம் ஆளரவமற்று காட்சி அளிக்கிறது.
காசாவுக்கு மிக அருகில் அந்நகர் அமைந்துள்ளதால், ஹமாஸ் படையினர் ராக்கெட் தாக்குதல் ஆபத்து உள்ளதாக கூறி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் அரசு கேட்டுக்கொண்டது.
இதனையடுத்து வீடுகள், வாகனங்கள், உடமைகளை அப்படியே விட்டுவிட்டு மக்கள் சென்றுள்ளனர்.
இதனால் தெருக்கள் அனைத்திலும் மயான அமைதி நிலவுகிறது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதல் முடிவுக்கு வந்த பிறகே மக்கள் ஊர் திரும்புவார்கள் என்று கருதப்படுகிறது.
(Visited 12 times, 1 visits today)