பரபரப்பிற்கு மத்தியில் இரகசிய ராணுவ படைத் தளத்துக்குச் சென்ற இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

பரபரப்பிற்கு மத்தியில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இரகசிய ராணுவ படைத் தளத்துக்குச் சென்றதுடன்
ஹமாஸின் எதிர்தாக்குதலை சமாளிக்க தயாராக இருக்க வலியுறுத்தியுள்ளார்.
மேற்குக் கரையில் உள்ள இரகசிய ராணுவ படைத் தளத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சென்றார்.
அங்கு வைத்து காசா மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் குறித்து படைத் தளபதியிடம் அவர் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
ஜுடியா மற்றும் சமாரியா பகுதிகளில் இருந்து ஹமாஸ் படையினர் எதிர்தாக்குதல் நடத்தும் சாத்தியக்கூறுகள் உள்ளதால், படைகளைத் தயார் நிலையில் இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிணைக் கைதிகளை விடுவிக்காமல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியவிட்டதாகக் கூறி காசாவில் உள்ள ஹமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
(Visited 31 times, 1 visits today)