எலான் மஸ்க்குடன் பேச்சுவார்த்தை நடத்திய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
தொழில்நுட்ப மேம்பாடு குறித்து விவாதிக்க அமெரிக்க(America) ஜனாதிபதி டிரம்பின்(Trump) முக்கிய கூட்டாளியான கோடீஸ்வரர் எலோன் மஸ்க்குடன்(Elon Musk) பேசியதாக இஸ்ரேலிய(Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) தெரிவித்துள்ளார்.
“பிரதமரும் மஸ்க்கும் இஸ்ரேலில் செயற்கை நுண்ணறி(artificial intelligence) தொழில்நுட்பங்களின் முன்னேற்றம் மற்றும் மேம்பாடு குறித்து விரிவாகப் பேசினர்” என்று நெதன்யாகுவின் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், “சைபர் மற்றும் பிற தொழில்நுட்பங்களைப் போலவே இஸ்ரேலை முன்னோக்கி நகர்த்தி இந்தத் துறையில் உலகளாவிய தலைவராக மாற்ற நாங்கள் திட்டமிட்டுள்ளோம்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.




