இஸ்ரேல் இராணுவ தாக்குதல் தீவிரம் – வெளியேறும் பாலஸ்தீனர்கள்

காஸா சிட்டியில் இருந்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் வெளியேற முயற்சி செய்து வருகின்றனர்.
இஸ்ரேல் இராணுவ தாக்குதலை நடத்தியதையடுத்து இவ்வாறு மக்கள் வெளியேறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பீரங்கிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் காஸா சிட்டிக்குள் நுழையும் காணொளியை இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளாக அங்கு நடத்தப்பட்ட தாக்குதல்களில் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்தன.
ஹமாஸ் அமைப்பையும் அதன் நட்பு அமைப்புகளையும் துடைத்தொழிப்பதே நோக்கமென்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு தெரிவித்தார்.
கிட்டத்தட்ட 400,000 பாலஸ்தீனர்கள் ஏற்கனவே காஸா சிட்டியிலிருந்து வெளியேறியிருக்கின்றர். போர் தொடங்கியிலிருந்து ஆக மோசமான தாக்குதல்கள் நேற்று இரவு நடத்தப்பட்டதாய்க் கூறப்பட்டது. அதில் 90க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.