உலகம் செய்தி

சிரியா மீது இஸ்ரேல் இராணுவம் ஏவுகணை தாக்குதல்

சிரியா மீது இஸ்ரேல் இராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவின் டமாஸ்கஸ் மற்றும் அலெப்போவின் முக்கிய விமான நிலையங்களை இஸ்ரேல் குறிவைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தாக்குதல்கள் காரணமாக அந்தந்த விமான நிலையங்களின் ஓடுபாதைகள் முற்றாக அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதி சிரியா அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானில் இருந்து ஆயுதங்களுடன் வரும் பல விமானங்களை சம்பந்தப்பட்ட விமான நிலையத்தில் தரையிறக்கும் திட்டம் இருந்ததாக கூறப்படுகிறது.

எனவே, அந்த விமானங்கள் தரையிறங்குவதை தடுக்கவே இஸ்ரேல் அந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிரியாவுக்கு ஈரான் வழங்கிய ஆயுதங்கள் சிரியா, லெபனான் மற்றும் பாலஸ்தீனத்தில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதலால் சிரியா பொதுமக்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

(Visited 6 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி