ஹிஸ்புல்லா ஆயுதங்களை ஏந்தவில்லை என்றால் லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேறும்!

ஹிஸ்புல்லாவை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், ஹிஸ்புல்லாவை ஆயுதம் இல்லாத குழுவாக்க லெபனான் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இந்த நடவடிக்கையை லெபனான் ராணுவம் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கியுள்ளது.
இராணுவம் ஹிஸ்புல்லாவின் ஆயுதங்களை பறிமுதல் செய்து வருகிறது. இந்த நிலையில் லெபனான் அமைச்சரவை முடிவை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் ஹிஸ்புல்லா ஆயுதங்களை ஏந்தவில்லை என்றால், இஸ்ரேல் ராணுவம் லெபனானில் இருந்து வெளியேறும் எனத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் லெபனானில் உள்ள ஐந்து மலைப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)