ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல் – பிணைக் கைதிகள் விடுவிப்பதை நிறுத்திவைத்த ஹமாஸ்
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/ce.jpg)
இஸ்ரேல் ஒப்பந்தத்தை மீறியதால் பிணைக் கைதிகள் விடுவிப்பதை மறு அறிவிப்பு வரும்வரை நிறுத்தி வைத்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
காசா பகுதியில் தாக்குதலைத் தொடருவதன் மூலம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறிவிட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி முதற்கட்டமாக, 33 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.
16 பேர் ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 17 பேரில் 8 பேர் இறந்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், 9 பேர் இன்னும் விடுவிக்கப்படவேண்டி உள்ளது. அதேபோல், ஒப்பந்தப்படி 1,900 பாலஸ்தீன கைதிகளில் நூற்றுக்கணக்கானோரை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.
(Visited 3 times, 3 visits today)