காசாவில் பல உயரமான கட்டிடங்களை குறி வைத்த இஸ்ரேல் – தொடரும் தீவிர தாக்குதல்

நேற்று காசா நகரில் பல உயரமான கட்டிடங்களை இஸ்ரேலிய இராணுவம் குறி வைத்து தாக்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வார ஆரம்பத்தில் நகரத்தில் உள்ள மக்கள் முழுமையாக வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதன் பின்னர், இடம்பெற்ற பாரிய தாக்குதலில் இதுவும் ஒன்றாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களால் பல இலட்சம் பாலஸ்தீன மக்கள் அவல நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்தநிலையில் காசா மீதான இந்த தாக்குதல்களுக்கு மத்தியில், ஹமாஸினால் பிடித்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளின் பாதுகாப்பு குறித்து இன்று இஸ்ரேலிய அமைச்சரவை ஆராயவுள்ளதாகப் பிரதமர் பெஞ்சமின் நெந்தன்யாகு தெரிவித்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)