ஹமாஸ் போராளிகள் பணயக்கைதிகளை பிடிக்கும் காணொளியை வெளியிட்டது இஸ்ரேல்
அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான தாக்குதலுக்குப் பிறகு, ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளை காசா பகுதியில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிஃபா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாக இஸ்ரேல் கூறுகிறது.
இது தொடர்பான காட்சிகளையும் இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அல்ஷிஃபா வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெராக்களில் பதிவான தரவுகளின் ஊடாக இஸ்ரேல் இராணுவம் இதனைக் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பணயக்கைதிகளில் இருந்த ஒரு இஸ்ரேலிய சிப்பாய் வைத்தியசாலையில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மேலும், இஸ்ரேல் மீதான தாக்குதலுக்குப் பிறகு ஹமாஸ் போராளிகளால் காசாவிற்கு அழைத்து வரப்பட்ட 19 வயது சிறுமியும் அந்த வைத்தியசாலையில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் வெளிப்படுத்தியது.
இதற்கிடையில், ஹமாஸ் அமைப்பின் கட்டளை மையம் என்று தாங்கள் கூறும் இடத்தில் ஒரு சுரங்கப்பாதையைக் கண்டுபிடித்ததாக இஸ்ரேலிய இராணுவமும் கூறுகிறது. எனினும் ஹமாஸ் அதனை மறுத்துள்ளது.