மத்திய கிழக்கு

அமெரிக்காவின் வேண்டுகோளுக்கிணங்க காசா மீதான தரைவழி தாக்குதலை தள்ளிவைத்துள்ள இஸ்ரேல்

அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று காசா மீதான தரைவழி தாக்குதலை தள்ளி வைக்க இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான போர் 20வது நாளாக தொடர்ந்து வருகிறது. இரு தரப்பிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன. முன்னதாக நடைபெற்ற தாக்குதல்களில், காஸா பகுதியில் 5000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக காஸா சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் 14,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுவரை இருதரப்பிலும் 8000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், காஸாவுக்குள் தரைவழியாக நுழைந்து தாக்குதல் நடத்தும் திட்டத்தைத் தள்ளி வைக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. மேற்கு ஆசிய நாடுகளில் அமெரிக்க ராணுவ நிலைகளை வான்வழித் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை செய்யும் வரை, காஸாவுக்குள் படையினரை அனுப்ப வேண்டாம் என்று அமெரிக்கா கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து இஸ்ரேல் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், ‘ஈராக், சிரியா, குவைத், ஜோர்டான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளில், அந்நாட்டு ராணுவத்தினர் ஏராளமானோர் உள்ளனர். இந்நிலையில், காஸா பகுதியில் இஸ்ரேல் தரைவழித் தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாக, அந்தப் பகுதியில் உள்ள தனது ராணுவ நிலைகளுக்கு வான்வழி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

மேற்கு ஆசியாவிலுள்ள தங்கள் ராணுவ நிலைகளின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டால், அந்த ஏவுகணைகளை இடைமறித்து அழிப்பதற்கான தளவாடங்களை அந்தப் பகுதிகளில் நிறுவ அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அந்தப் பணிகள் நிறைவடையும் வரை காஸாவில் தரைவழித் தாக்குதலை நிறுத்திவைக்க வேண்டும் என்று இஸ்ரேலை அமெரிக்கா கேட்டுக்கொண்டது. அதற்கு இஸ்ரேலும் ஒப்புக்கொண்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 10 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.