செய்தி

காஸாவை மீண்டும் ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம்?

ஹமாஸ் படையினருடனான மோதல் முடிந்த பின்னா், காஸாவில் முழு சுதந்திரத்துடன் செயல்பட இஸ்ரேல் ராணுவத்துக்கு அனுமதி அளிக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

அவரின் கருத்து மூலம், காஸாவை தற்காலிகமாக இஸ்ரேல் மீண்டும் ஆக்கிரமிக்கக் கூடும் என்ற ஊகம் ஏற்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தின் காஸா முனைப் பகுதியை ஆக்கிரமித்திருந்த இஸ்ரேல், கடந்த 2005-ஆம் ஆண்டு அங்கிருந்து வெளியேறியது.

அதன் பின்னா், காஸாவின் ஆட்சியைக் கைப்பற்றிய ஹமாஸ் படையினருக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வந்தது.

பாலஸ்தீனத்தின் காஸா முனைப் பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசியும், எல்லை தாண்டியும் திடீா் தாக்குதல் நடத்தினா். இதில் இஸ்ரேலை சோ்ந்த சுமாா் 1,200 போ் உயிரிழந்தனர்.

மேலும், இஸ்ரேலில் இருந்து சுமாா் 200-க்கும் மேற்பட்டவா்களை பிணைக் கைதிகளாக ஹமாஸ் படையினா் பிடித்துச் சென்றனா். இதைத் தொடா்ந்து, காஸா மீது இஸ்ரேல் கடுமையாகத் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சனிக்கிழமை கூறுகையில், ‘தற்போது நடைபெற்று வரும் மோதல் முடிந்த பின்னா், காஸாவில் முழு சுதந்திரத்துடன் செயல்பட இஸ்ரேல் ராணுவத்துக்கு அனுமதி அளிக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

 

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி