ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரிகளை நாடு கடத்த திட்டமிடும் இஸ்ரேல்!

பாலஸ்தீன குழுவுடனான போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக ஹமாஸ் மூத்த அதிகாரிகளை நாடுகடத்த வேண்டுமா என்பது குறித்து இஸ்ரேல் தனது நிலைப்பாட்டை மென்மையாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
“சில உயர் இராணுவத் தளபதிகளை அடையாளமாக வெளியேற்றுவதற்கு இஸ்ரேல் இப்போது தயாராக உள்ளது” என்று சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
“காசாவில் ஹமாஸ் மூத்த அதிகாரிகள் அதிகம் இல்லை” என்று இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் கூறியதாக அது மேற்கோள் காட்டியது.
“அவர்களை நாடுகடத்த அனுப்ப எங்களுக்கு ஒரு பெரிய கப்பல் தேவையில்லை – ஒரு சிறிய படகு போதும் என தெரிவித்துள்ளது.
ஹமாஸின் இராணுவப் பிரிவை அகற்ற இஸ்ரேல் கோருகிறது, ஆனால் நூற்றுக்கணக்கான போராளிகள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டால் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்க தயாராக இருப்பதாகவும் அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.
டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதிலிருந்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வெள்ளை மாளிகைக்கு மூன்றாவது வருகைக்கு முன்னதாக, கத்தாரில் நேற்று அமைதிப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது.