ஹமாஸ் வசம் உள்ள பிணைக்கைதிகள் குறித்து பகிர்ந்துகொள்பவர்களுக்கு சன்மானம் வழங்கும் இஸ்ரேல்!
காசாவில் அமைதியாக வாழ விருப்பம் இருந்தால் ஹமாஸ் பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துள்ளவர்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்துக்கொள்ளுமாறு இஸ்ரேல் பாலஸ்தீனியர்களிடம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து இஸ்ரேலிய இராணுவத்தினர் இன்று (24.10) காசா பகுதியில் துண்டு பிரசுரங்களை விநியோகித்துள்ளனர்.
குறித்த துண்டு பிரசுரத்திலேயே மேற்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. “உங்களுக்கும் உங்கள் வீட்டிற்கும் பாதுகாப்பை வழங்குவதில் அதிகபட்ச முயற்சியை முதலீடு செய்வோம் என்று இஸ்ரேலிய இராணுவம் உறுதியளித்துள்ளது.
மேலும் நீங்கள் நிதி வெகுமதியைப் பெறுவீர்கள் என“றுட“ நாங்கள் உங்களுக்கு முழுமையான இரகசியத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கிறோம் எனவும் வலியுறுத்தியுள்ளது.
தகவலுடன் அழைப்பதற்கான தொலைபேசி எண்களை துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ளது.
(Visited 7 times, 1 visits today)