Rafha நகர் மீதான தாக்குதலுக்கு நாள் குறித்த இஸ்ரேல்
Rafhaவுக்குள் தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கான திகதி குறித்தாகிவிட்டது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
Rafha மீது படையெடுக்கக் கூடாது என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியும் அவர் இவ்வாறு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விடியோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஹமாஸ் அமைப்பினரை முழுமையாக ஒடுக்குவதற்கு Rafha நகரம் மீது படையெடுப்பது அவசியமாகும். அந்த நகர் மீது தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் மேற்கொள்ளப்போவது நிச்சயம்.
அதற்கான திகதி கூட குறிக்கப்பட்டுவிட்டது என்றார் அவர். எனினும், எந்தத் தேதியில் ராபா மீது இஸ்ரேல் ராணுவம் படையெடுக்கும் என்ற விவரத்தை அந்த விடியோவில் நெதன்யாகு குறிப்பிடவில்லை.
40,000 கூடாரங்கள்: இதற்கிடையே, ராபா மீது படையெடுப்பதற்கு முன்னதாக, அங்குள்ள மக்களை வெளியேற்றி தங்கவைப்பதற்காக 40,000 கூடாரங்களை வாங்கிவருவதாக இஸ்ரேல் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறினர்.