காஸாவின் பல்வேறு இடங்களில் வான்வழி தாக்குதல்கள் தடத்திய இஸ்ரேல் ;23 பேர் பலி!
காஸாவின் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையில் குறைந்தது 23 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நளுளிரவு முதல் காலை வரை காஸாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் வான்வழி மற்றும் பீரங்கி தாக்குதலை நடத்தியதாக ஸின்ஹூவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வடக்கு காஸாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேலிய விமானம்தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 6 பேர் பலியானதாகவும் 6பேர் காயமுற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடம்பெயர்ந்த மக்களின் நகரமான அல்-ஜவைதாவிலும் குண்டுகள் வீசப்பட்டதில் 10 பேர் பலியாகியுள்ளனர்.
நஸீரத் அகதிகள் முகாம்,தெற்கு நகரமான அல்-சைத்துன் ஆகிய இடங்களிலும் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
ராபாவில் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதலில் குறைந்தந்து 5 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாகவும் 7 பேர் காயமுற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்கு ராபா நோக்கி இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளை விரிவாக்கி வருவதாகவும் எகிப்து எல்லைக்கு அருகில் உள்ள பிலாடெல்பியா காரிடருக்கு இணையாக ராணுவம் முன்னேருவதாக பாலஸ்தீன வட்டாரங்கள் ஸின்ஹூவாவிமட் தெரிவித்துள்ளன.