இஸ்ரேல் – ஈரான் மோதல் – தீவிர அவதானத்தில் இந்தியா

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் மோதல் மற்றும் மத்திய கிழக்கில் நடந்து வரும் போர் குறித்து இந்திய அரசாங்கம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இஸ்ரேலில் தங்கியுள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பு குறித்து இந்திய அரசு மிகுந்த அக்கறையுடன் இருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகம், நாட்டிலுள்ள இந்திய குடிமக்கள் அமைதியாக இருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு இணங்குமாறும் அறிவுரை வழங்கியுள்ளது.
இஸ்ரேலின் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இஸ்ரேலிய அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் இந்திய தூதரகம் கூறுகிறது.
(Visited 18 times, 1 visits today)