காசா நகரத்தின் மீது தரைவழித் தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல்
காசா நகரத்தின் மீது இஸ்ரேல் தரைவழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
தரைவழித் தாக்குதல்களுக்கு மேலதிகமாக, இஸ்ரேல் நேற்று இரவு வான்வழித் தாக்குதல்களையும் நடத்தியதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
காசா பகுதியில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஆணையம் கூறியிருந்த பின்னணியில் அவர்கள் இந்தத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளனர்.
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 59 பேர் கொல்லப்பட்டதாகவும், 386 பேர் காயமடைந்ததாகவும் ஹமாஸ் கூறுகிறது.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் மதிப்பீட்டின்படி, காசா பகுதியில் சுமார் 350,000 பேர் ஏற்கனவே அந்தப் பகுதியை விட்டு வெளியேறிவிட்டனர்.





