மத்திய கிழக்கு

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் ராஃபா மீது தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் இஸ்ரேல்

ராஃபா மீதான தாக்குதலுக்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள வேளையிலும் இஸ்ரேல் தாக்குலை தீவிரப்படுத்தியிருக்கிறது.

இஸ்ரேலின் பீரங்கிகளும் வான்வழி தாக்குதல்களுடன் கனரக வாகனங்களும் வடக்கு காஸா வட்டாரத்தில் உள்ள ஜபாலியாவுக்குள் முன்னேறியுள்ளதாக திங்கட்கிழமை அன்று குடியிருப்பாளர்களும் ஹமாஸ் ஊடகங்களும் தெரிவித்தன.

தெற்கு ராஃபாவில் உள்ள முக்கிய நெடுஞ்சாலையை இஸ்ரேலிய பீரங்கிகளும் துருப்புகளும் கடந்துள்ளன.

ஜபாலியாவில் காஸாவின் எட்டு சிறப்பு அகதிகள் முகாம்கள் உள்ள முக்கியப் பகுதியை நோக்கி டாங்கிகள் முன்னேற முயற்சி செய்து வருகின்றன. பீரங்கிகளிலிருந்து பாய்ந்த குண்டுகள், முகாம்கள் உள்ள மையப் பகுதியில் விழுந்தன. வான்வழி தாக்குதலில் பல வீடுகள் நாசமடைந்தன என்று குடியிருப்பாளர்கள் தெரிவித்து்ளனர்.

Israel's war on Gaza live: Enclave's health system 'collapsing' | Israel  War on Gaza News | Al Jazeera

குண்டுகள் வீசப்பட்ட பகுதிகளில் தங்களுடைய குழுவை அனுப்ப முடியவில்லை என்று துணை மருத்துவ உதவியாளர்கள் தெரிவிக்கின்றனர். இஸ்ரேலின் தாக்குதல் அந்த அளவுக்குத் தீவிரமாக இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.எகிப்து எல்லை அருகே ராஃபாவின் பகுதிகளையும் இஸ்ரேல் விட்டுவைக்கவில்லை. அங்கும் வான்வழி தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டது.

ராஃபாவின் கிழக்குப் பகுதியைப் பிரிக்கும் சலாஹுதின் சாலையை இஸ்ரேலியப் படைகள் துண்டித்துவிட்டதாகவும் குடியிருப்பாளர்கள் கூறினர்.மேலும் ராஃபாவின் தென்கிழக்குப் பகுதியில் இஸ்ரேலியப் படைகளும் பீரங்கிகளும் கடுமையாகத் தாக்கி வருவதாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

Mithu

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.
error: Content is protected !!