இன்றைய முக்கிய செய்திகள் செய்தி மத்திய கிழக்கு

கடும் நெருக்கடியில் இஸ்ரேல் – இராணுவ வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை

இஸ்ரேலில் இராணுவ வீரர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை அடுத்து, போர்க்காலப் படை வீரர்கள் சுமார் 300,000 பேர் சண்டையிட அழைக்கப்பட்டனர்.

அவர்களில் 18 சதவீதமானோருக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டிய 40 வயதுக்கும் மேற்பட்ட நபர்களாகும்.

இஸ்ரேலில் 18 வயதுக்கும் மேற்பட்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் இராணுவச் சேவை கட்டாயமாகும்.

இஸ்ரேல் தற்போது காஸாவிலும் லெபனானிலும் போரில் ஈடுபட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரிலிருந்து காஸாவில் 367 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

லெபனானில் 37 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பணிக் காலம் நீட்டிக்கப்படுகிறது என்றும் இயல்பு வாழ்க்கைக்கு 6 மாதம் வரை திரும்ப முடியவில்லை என்றும் போர்க்காலப் படை வீரர்கள் சிலர் குறைகூறியுள்ளனர்.

வேலையை இழக்க நேரிட்டதாகவும் ஒருசிலர் குறிப்பிட்டனர்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!