உலகம் செய்தி

கிழக்கு காசாவில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள் தீவிரம்

கிழக்கு காசாவில், இஸ்ரேலிய இராணுவம் கடந்த 24 மணிநேரமாக தனது கட்டுப்பாட்டு பகுதியை விரிவுபடுத்தி வருவதாக அல் ஜசீரா செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் முக்கியமான சலா அல்-தின்வீதி [Salah al-Din Road]க்கு அருகே தங்கியிருந்த பல இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்கள் தங்குமிடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

காசா மீது இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து நீடிப்பதால், தற்போது காசா பகுதியின் 50 சதவீதத்திற்கும் அதிகமான பகுதி இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பின்னரும், இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்ததாகவும், இதுவரை நூற்றுக்கணக்கான பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காசா நகரத்திலிருந்து செய்தி வெளியிட்ட அல் ஜசீராவின் ஹனி மஹ்மூத் [Hani Mahmoud], கிழக்கு காசாவில் நிலப்பரப்புகள் தொடர்ந்து சுருக்கப்படுவதால்
மக்கள் கடும் நெரிசலில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

இதனிடையே காசாவின் தெற்கு பகுதிகளான ரஃபா [Rafah] மற்றும் கான் யூனிஸ் [Khan Younis] அருகிலும், பீரங்கி மற்றும் ஹெலிகொப்டர் தாக்குதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய காசாவில் உள்ள மகாசி முகாம் [Maghazi Camp] பகுதியில், முன்பு தாக்குதலுக்குள்ளான ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!