சிரியாவின் கடற்படை கப்பல்களை தாக்கி அழித்த இஸ்ரேல்
சிரியாவின் கடற்படைக் கப்பல்களை இஸ்ரேல் போர்க்கப்பல்கள் தாக்கி அழித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இந்த விடயம் தெரிவித்துள்ளார்.
பஷார் அல் ஆசாத் அரசு கவிழ்ந்து அதிகாரத்தை சிரியா கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய நிலையில், சிரியாவின் 3 ராணுவ மையங்கள் மற்றும் குறிப்பிட்ட இலக்குகளில் இஸ்ரேல் விமானப் படை வான் தாக்குதல் நடத்தி குண்டுகளைப் பொழிந்தது.
சிரியாவின் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஆயுதக் கிடங்குகள் இத்தாக்குதலில் அழிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும் சேதம் விளைவிக்கும் ஆயுதங்கள், மற்றும் ரசாயன ஆயுதங்கள் தவறான நபர்களின் கைகளில் சிக்குவதைத் தடுக்க தாக்குதல் நடத்தி அழித்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
(Visited 2 times, 1 visits today)