ஆசியா

இஸ்‌ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் விழிபிதுங்கும் வகையில் பதிலடி தரப்படும்: ஈரான் சூளுரை

ஈரான் மீதும் அதன் ஆதரவு அமைப்புகள் மீதும் தாக்குதல்களை நடத்திய இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு எதிராக மிகக் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என்று ஈரானின் உயரிய தலைவர் அயத்துல்லா அலி காமெனி நவம்பர் 2ஆம் திகதியன்று சூளுரைத்தார்.

“ஈரானின் பகை நாடுகளான இஸ்‌ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் எதிராக விழி பிதுங்கும் பதிலடி தரப்படும்,” என்று ஈரானியத் தலைநகர் தெஹ்ரானில் மாணவர்களிடம் பேசியபோது காமெனி கூறினார்.

ஏமனில் உள்ள ஹூதிப் போராளிகள், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு, பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பு ஆகியவற்றை ஆதரித்து அவர் பேசினார்.

2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தியன்று, ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலுக்குள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினர்.இதையடுத்து, காஸா மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து வருகிறது.பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பும் ஹூதிப் போராளிகளும் இஸ்‌ரேலுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தி வருகின்றன.

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசான் நஸ்ரல்லாவை இஸ்ரேல் கொன்றதை அடுத்து, அக்டோபர் மாதம் 1ஆம் திகதியன்று இஸ்‌ரேல் மீது ஈரான் ஏவுகணைகளைப் பாய்ச்சியது.இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அக்டோபர் 26ஆம் திகதியன்று ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

இதில் குறைந்தது நான்கு ஈரானிய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.இஸ்ரேலியத் தாக்குதலால் அவ்வளவாகச் சேதம் ஏற்படவில்லை என்று ஈரான் கூறியது.பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்ததாக ஈரானிய ஊடகம் செய்தி வெளியிட்டது.இந்நிலையில், இஸ்‌ரேலியத் தாக்குதலில் உயிரிழந்த ஈரானிய ராணுவ வீரர்களுக்குத் காமெனி அஞ்சலி செலுத்தினார்.

அக்டோபர் 26ஆம் திகதியன்று நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் பதிலடித் தாக்குதல் நடத்தக்கூடாது என்று இஸ்‌ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஆனால், இஸ்‌ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரானியப் புரட்சிப்படையின் செய்தித்தொடர்பாளர் அலி முகம்மது நைனி நவம்பர் 2ஆம் திகதியன்று தெரிவித்தார்.

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!