போரில் உயிரிழந்த அனுலா ஜயதிலக்கிற்கு கௌரவத்தை வழங்க இஸ்ரேல் இணக்கம்
ஹமாஸ் தாக்குதலுக்கு மத்தியில் உயிரிழந்த இலங்கைப் பெண் அனுலா ஜயதிலகவின் குடும்பத்திற்கு, போரில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய பிரஜைக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து சலுகைகள் மற்றும் இழப்பீடுகளை வழங்குவதாக இஸ்ரேல் அரசாங்கம் அறிவித்துள்ளது.
அவரது உடலை இரண்டு நாட்களுக்குள் இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகத்திடம் ஒப்படைப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளதாக இலங்கை தூதுவர் நிமல் பண்டா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொது முகாமையாளர் (பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்பு) காமினி செனரத் தெரிவித்தார்.
அவர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் சட்டப்பூர்வமாகப் பதிவுசெய்யப்பட்டவர் மற்றும் சரியான விசாவுடன் இஸ்ரேலில் பணிபுரிகிறார்.
அதன்படி, போரில் இறக்கும் இஸ்ரேலிய பிரஜையின் அனைத்து சலுகைகளுக்கும் அவரது குடும்பத்தினருக்கு உரிமை உண்டு என்றும் அவர் கூறினார்.
இந்த நெருக்கடிக்கு மத்தியில் காணாமல் போன இலங்கையர் யாதவர பண்டார தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் இல்லை என பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.