போர் நிறுத்த யோசனைக்கு இணக்கம் வெளியிட்ட இஸ்ரேல்

போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையின் போது முன்வைக்கப்பட்ட பிரேரணையை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஆண்டனி பிளின்கன் தெரிவித்துள்ளார்.
இந்த வாரத்தில் ஹமாஸுடன் இது தொடர்பான கலந்துரையாடல்களை நடத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் உடன் அமெரிக்க இராஜாங்க செயலாளர் நேற்று கலந்துரையாடியுள்ளார்.
பணயக்கைதிகளை விடுவிப்பதும் போர் நிறுத்தமும் காஸாவில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் முன்னதாக தெரிவித்திருந்தார்.
(Visited 19 times, 1 visits today)