இலங்கையில் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு நிறுத்தப்படுகிறதா? – அரசாங்கம் விளக்கம்!
இலங்கையில் சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக வெளியான செய்திகளை அரசாங்கம் மறுத்துள்ளது.
இந்நிலையில் அவர்களுக்கான கொடுப்பனவை 10000 ரூபாவாக அதிகரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலக மட்டத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சமூக வலுவூட்டல் செயற்றிட்டங்கள் தொடர்பான தரவுகள் புதுப்பித்தல் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் எந்தவொரு சலுகையும் இல்லாதொழிக்கப்பட மாட்டாது எனவும் கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.
(Visited 12 times, 1 visits today)





