தலைநகரில் ஆட்டம் காண்கிறதா என்.பி.பி. ஆட்சி?
கொழும்பில் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஆளுகையின் கீழுள்ள கொழும்பு மாநகரசபையின் (Colombo Municipal Council) வரவு- செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“கொழும்பு மாநகரசபையின் (CMC) வரவு- செலவுத் திட்டம் தோல்வி அடைந்திருந்தாலும் நிர்வாக நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு எவ்வித தடையும் இல்லை.
உள்ளாட்சிசபைத் தேர்தல் (Local Government Election Act) சட்டத்தின் பிரகாரம் அடுத்த தடவை வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால்கூட அடுத்தவருடம்வரை மேயரை மாற்ற வேண்டியதில்லை.
மூன்றாவது தடவை தோற்கடிக்கப்பட்டால் புதிய மேயரை தெரிவுசெய்ய வேண்டும். இதுவும் கொழும்பு மாநகரசபையில் எதிரணி தரப்புக்கு சவால்மிக்க விடயமாக அமையும். அதற்குரிய பெரும்பான்மை இல்லை.
எனவே, கொழும்பு மாநகரசபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை.” – என்றார் அமைச்சர் வசந்த சமரசிங்க.





