30 வயதிற்குள் திருமணம் கட்டாயமா? அறிந்திருக்க வேண்டியவை
திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்று சொல்வார்கள். அப்படி திருமணம் 30 வயதிற்குள் முடித்து விட வேண்டும் இல்லையென்றால் அது வேஸ்ட் என்றே சொல்வார்கள். ரஜினிகாந்தின் படமான பாட்ஷாவில் கூட 3ஆம் 8-இல் செய்யாதது திருமணம் அல்ல என்று கூட சொல்லியிருப்பார். அப்படி 30 வயதிற்குள் திருமணம் ஏன் செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
ஒன்றாக முன்னேறலாம்
உங்கள் எதிர்காலம் குறித்த திட்டங்களை தீட்டும் காலகட்டமான இந்த 20-களில் திருமணம் செய்வது இருவரும் ஒன்றாக இணைந்து உங்கள் எதிர்காலத்தை செம்மைப்படுத்தி கொள்ள உதவும்.
உணர்வுப்பூர்வமான பிணைப்பு:
ஆய்வுகளின் படி இளம்பருவத்தில் இருவருக்கும் உண்டாகும் புரிதல், பிரிக்க முடியாத ஒரு பிணைப்பாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த இளம் வயது திருமணங்கள் ஒரு உணர்வுபூர்வமான பிணைப்பை உண்டாகுகின்றன.
எதிர்கால திட்டங்கள்:
30 வயதை எட்டுவதற்கு திருமணம் செய்யும் போது, உங்கள் எதிர்காலத்தை குறித்து திட்டமிடுவதற்கான நேரமும் – காலமும் போதுமான அளவு உள்ளது. அந்த வகையில் உங்கள் துணையுடன் சேர்ந்து எதிர்காலத்தை திட்டமிட ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
நிதி தேவைகள் குறையும்:
இளம் வயதில் திருமணம் செய்யும் ஜோடிகளின் எதிர்கால திட்டம் சிறப்பாக இருக்கும் என கூறப்படும் நிலையில், இவர்களது நிதி மேலாண்மை திட்டங்களும் சிறப்பாக அமைகிறது.
நீண்ட நாட்கள் இணைந்து வாழலாம்:
முதுமையில் திருமணம் செய்பவர்களுடன் ஒப்பிடுகையில் இந்த 30 வயதிற்குள் திருமணம் செய்யும் நபர்களுக்கு தனது துணையுடன் இணைந்து வாழ்வதற்கான நேரம் அதிகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி – கல்கி