இந்தியா

விரைவில் திறந்த புத்தகப் பரீட்சை!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் ( சிபிஎஸ்இ ) கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பின் பரிந்துரைகளுடன் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறந்த புத்தகத் தேர்வுகளை (ஓபிஇ) செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கான ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் போன்ற பாடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் திறந்த புத்தகத் தேர்வுகளையும், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு ஆங்கிலம், கணிதம் மற்றும் உயிரியல் போன்றவற்றையும் தேர்வுசெய்ய வாரியம் திட்டமிட்டுள்ளதாக ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன.

இந்த நடைமுறை மாணவர்களின் நினைவாற்றலை மதிப்பிடாமல் பாடத்தின் மீதான அவர்களது புரிதல் திறனுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக கூறப்படுகின்றது.

இந்தநிலையில் குறித்த திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சோதனையானது, மாணவர்கள் அத்தகைய சோதனைகளை முடிக்க வேண்டிய நேரத்தை மதிப்பிடுவதையும், பங்குதாரர்களிடமிருந்து கருத்துக்களை சேகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

(Visited 7 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே