யாழ்ப்பாணத்தில் இரும்புப் பெட்டியால் ஏற்பட்ட பதற்றம்

யாழ்ப்பாண நகர்பகுதியில் இன்று சனிக்கிழமை (17) காலை இரும்பு பெட்டியொன்று அனாதரவாக காணப்பட்டதால் அதில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற அச்சம் காணப்பட்டு பரபரப்பான சூழல் உருவானது.
வைத்தியசாலை வீதியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அருகிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றது.
இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு தகவலளித்த நிலையில் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் குறித்த இடத்துக்கு விரைந்து பெட்டியை சோதனையிட்டனர்.
இதன்போது குறித்த பெட்டிக்குள் இயந்திர சாவிகள் காணப்பட்டமை தெரியவந்ததையடுத்து நிலைமை சுமூகமானது. இதனையடுத்து பொலிஸார் குறித்த பெட்டியை அங்கிருந்து கொண்டு சென்றனர்.
(Visited 11 times, 1 visits today)