14 ஆண்டுகளில் முதல் முறையாக சீனா செல்லும் அயர்லாந்து பிரதமர்!
அயர்லாந்து பிரதமர் மைக்கேல் மார்ட்டின் (Micheál Martin) முதல் முறையாக சீனாவிற்கு செல்லவுள்ளதாக நேற்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 14 ஆண்டுகளாக சீனா செல்லும் முதல் ஐரிஸ் ஜனாதிபதி மைக்கேல் மார்ட்டின் ஆவார்.
இந்த விஜயத்தின் மூலம் சீன-ஐரோப்பிய ஒன்றிய உறவுகளை வளர்க்கவும் அயர்லாந்துடன் இணைந்து பணியாற்ற முடியும் எனவும் சீன வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் மற்றும் சீஸ் உள்ளிட்ட பொருட்களுக்கு சீனா 42.7% வரை தற்காலிக வரிகளை விதித்துள்ள நிலையில் இந்த விஜயம் அமைந்துள்ளது.





