காஸாவிற்கு 10 மில்லியன் லிட்டர் எரிபொருளை அனுப்பும் ஈராக்

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக காசா பகுதிக்கு 10 மில்லியன் லிட்டர் எரிபொருளை அனுப்ப ஈராக் ஒப்புக்கொண்டதாக பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி தெரிவித்தார்.
காஸாவிலிருந்து காயமடைந்த பாலஸ்தீனியர்களைப் பெற்றுக் கொள்ளவும், அவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கவும் ஈராக் ஒப்புக்கொண்டது என, பிரதமர் ஒரு அறிக்கையில் மேலும் கூறினார்.
எரிபொருள் பற்றாக்குறையால் மருத்துவமனைகள், தண்ணீர் அமைப்புகள், பேக்கரிகள் மற்றும் நிவாரணப் பணிகள் முடங்கியுள்ளன.
(Visited 11 times, 1 visits today)