இலங்கை ஜனாதிபதி வெற்றிக்கு ஈரான் வெளியுறவு அமைச்சர் வாழ்த்து
ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராச்சி இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் வெற்றிகரமான தேர்தலை நடத்தியதற்காக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“சமீபத்திய வெற்றிகரமான ஜனாதிபதித் தேர்தல்களுக்காக இலங்கை மக்களுக்கும், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களின் வெற்றிக்காகவும் அன்பான வாழ்த்துகள்” என்று அப்பாஸ் ஆராச்சி தனது X கணக்கில் பதிவிட்டார்.
ஈரான் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான நல்ல மற்றும் நட்புறவு அவரது தலைமையின் கீழ் தொடரும் மற்றும் மேம்படும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
(Visited 6 times, 1 visits today)