12 குடும்ப உறுப்பினர்களை சுட்டுக் கொன்ற ஈரானிய நபர்

ஈரானின் கெர்மன் மாகாணத்தில் ஒருவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 12 பேரை சுட்டுக் கொன்றதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 4:30 மணியளவில் 25 வயதுடைய துப்பாக்கிதாரி ஒருவர் தனது இரண்டு மாமாக்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்று கெர்மன்ஸ் பொலிஸ் கமாண்டர் நாசர் ஃபர்ஷித் தெரிவித்தார்.
‘குடும்ப வேறுபாடுகள்’ காரணமாக குற்றம் சாட்டப்பட்டவர் இந்தக் குற்றத்தைச் செய்ததாக ஃபர்ஷித் கூறினார், அவரைக் கைது செய்வதற்கான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது, குற்றத்தில் கலாஷ்னிகோவ் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 12 times, 1 visits today)