எந்த தாக்குதலுக்கும் பதிலடி கொடுப்போம் – ட்ரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் கண்டனம்
எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் கடுமையான பதிலடி கொடுப்பதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் தளத்திலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“நாட்டின் இராணுவப் படைகள் மற்றும் உபகரணங்கள் மிகவும் வலிமையானவை. போர் தோல்வியிலும் நாட்டின் அன்றாட வாழ்க்கை பெரும்பாலும் தொடர்ந்துள்ளது”
என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீண்டும் அணுசக்தி மற்றும் ஏவுகணை திறன்களை கட்டியெழுப்ப முயன்றால், அமெரிக்கா மேலும் இராணுவ நடவடிக்கை எடுக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், எச்சரித்தார்.
ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்த பிறகு, “ஈரான் மீண்டும் கட்டமைக்க முயற்சிப்பதாக இருந்தால், அவர்களை முறியடிப்போம்” என்று அறிவித்தார்.
ஜூன் மாதத்தில் நடந்த மோதல்களில் ஈரான் மற்றும் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்களை நடத்தின.
இஸ்ரேல் 12 நாட்களில் 27 ஈரானிய மாகாணங்களில் சுமார் 360 தாக்குதல்கள் நடத்தியது. இதனால் 1,000 க்கும் மேற்பட்ட ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் அழிக்கப்பட்டு, மூத்த இராணுவ அதிகாரிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் பலர் உயிரிழந்தனர்.
இதேவேளை,ஈரான் 500 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் மீது வீசியது.
மேலும் ஈரான் முழுமையாக போருக்கு தயாராக உள்ளதென அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றன.





