மத்திய கிழக்கு

தடை செய்யப்பட்ட ஏவுகணை மூலம் இஸ்ரேலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஈரான்

இஸ்ரேலுக்கு எதிரான போரில், தடை செய்யப்பட்ட கிளஸ்டர் ஏவுகணை மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் 8வது நாளாக தொடர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் இருநாடுகளிடையே தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதிநவீன ஆயுதங்களை போரில் பயன்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், இந்தப் போரில் சர்ச்சைக்குள்ளான ஆயுதமான கிளஸ்டர் ஏவுகணை மூலம் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து இஸ்ரேல் தரப்பில் கூறியதாவது: கிளஸ்டர் ஏவுகணை ஒருமுறை வெடித்து, அதில் இருந்து சிறிய வகை வெடிகுண்டுகள் பிரிந்து சென்று தாக்கும். அந்த வகையில், இஸ்ரேலின் அஷோர் நகரின் மீது கிளஸ்டர் ஏவுகணை மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. சுமார் 8 கி.மீ., தொலைவுக்கு இதன் பாதிப்பு இருந்தது. இதில், எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை, என தெரிவித்துள்ளது.

இது குறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் எபி டெப்ரின் கூறுகையில், ‘பயங்கரவாத நாடு (ஈரான்) பொது மக்களை குறிவைக்கிறது. கிளஸ்டர் ஆயுதங்களைக் கூட பயன்படுத்துகிறது,’ எனக் குற்றம்சாட்டினார்.

கிளஸ்டர் ஏவுகணையை ஈரான் பயன்படுத்தியதற்கு, ஆயுதக் கட்டுப்பாட்டு சங்க குழுவின் நிர்வாக இயக்குனர் டேரில் கிம்பால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது;

கிளஸ்டர் ஏவுகணை போன்ற ஆயுதங்கள் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும். குறிப்பாக, பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தினால், வெடிக்காத வெடிகுண்டுகளால் பின்விளைவுகள் மோசமாக இருக்கும், எனக் கூறினார்.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.