ஈரான் ஜனாதிபதி ஹெலிகாப்டர் விபத்து – யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை?
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தை உயிர்காப்பாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக ஈரான் அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
இதற்கிடையில், ஈரானிய செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர், நிலைமை சரியான இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் ஜனாதிபதி உயிருடன் இருக்கிறாரா? இல்லை? இதுவரையில் உறுதியான அறிக்கையை வெளியிட முடியாது எனவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என ஈரானிய அரசு செய்தி நிறுவனமான IRINN மற்றும் அரை அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான Mehr News செய்தி வெளியிட்டுள்ளன.





