இன்றைய முக்கிய செய்திகள் மத்திய கிழக்கு

கடவுளின் எதிரிகள் என குறிப்பிட்டு டிரம்ப், நெதன்யாகுவுக்கு எதிராக பத்வா வெளியிட்ட ஈரான்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு எதிராக, ‘பத்வா’ எனப்படும் மத ஆணையை ஈரான் மூத்த மதகுரு பிறப்பித்துள்ளார்.

அவர்களை கடவுளின் எதிரிகள் என குறிப்பிட்டு அவர் அதனை பிறப்பித்துள்ளார்.

ஈரானின் அணு ஆயுத தளங்கள் மற்றும் ராணுவ மையங்களை இஸ்ரேல் கடந்த மாதம் 13ம் திகதி தாக்கியது. பதிலுக்கு, இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவியது. அமெரிக்காவும் ஈரானின் மூன்று அணுசக்தி தளங்களை அழித்தது. இதைத் தொடர்ந்து போர் ஒப்பந்தம் ஏற்பட்டு சண்டை நிறுத்தப்பட்டது.

போரின்போது ஈரானின் அணு விஞ்ஞானிகள், ராணுவ தளபதிகள் பலர் கொல்லப்பட்டனர். ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா அலி கமேனியைக் கொல்லப்போவதாக இஸ்ரேல் மிரட்டல் விடுத்தது.

இதற்கு, ஈரானின் மூத்த மதகுருவான நாசர் மகாரெம் ஷிராஸி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டிரம்ப், நெதன்யாகுவுக்கு எதிராக பத்வா எனப்படும் மத ஆணையை அவர் பிறப்பித்துள்ளார். பத்வா என்பது முஸ்லிம் சட்டமான ஷரியத் அடிப்படையில், வழங்கப்படும் தீர்ப்பாகும்.

ஷிராஸி வெளியிட்டுள்ள உத்தரவில், ‘இவர்கள், ‘மொஹரெப்’ எனப்படும் கடவுளுக்கு எதிரானவர்கள். மொஹரெப் என்று அடையாளம் காணப்பட்டவர்களுக்கு, மரண தண்டனை வழங்க வேண்டும். இவர்களை வருந்தச் செய்யுங்கள். இதற்காக போராடுபவர்கள் கடவுளின் பாதையில் புனிதர்களாக கருதப்படுவர்.

‘முஸ்லிம்கள் அல்லது முஸ்லிம் அரசுகளால், இந்த எதிரிகளுக்கு வழங்கப்படும் எந்தவொரு ஒத்துழைப்பும் அல்லது ஆதரவும் தடை செய்யப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் ஒன்றுபட்டு, இஸ்லாமிய குடியரசுத் தலைமையை அச்சுறுத்தியதற்காக அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தலைவர்களை வீழ்த்த வேண்டும்’ என, கூறப்பட்டுள்ளது.

 

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.