இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு – நபர் ஒருவரை தூக்கிலிட்ட ஈரான்!
இஸ்ரேலுக்கா உளவு பார்த்ததாக கூறப்படும் நபர் ஒருவரை ஈரானிய அரசாங்கம் தூக்கிலிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
மஹ்சா அமினியின் மரணத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு தினம் நெருங்கி வருகின்ற நிலையில் மேலும் பல கைதிகள் தூக்கிலிடப்படலாம் என சமூக ஆர்வலர்கள் எச்சரித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது ஈரானே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நீதித்துறையின் மிசான் செய்தி நிறுவனம், தூக்கிலிடப்பட்ட நபரை பாபக் ஷாபாசி என்று அடையாளம் கண்டுள்ளது, அவர் ஈரானிய தரவு மையங்கள் மற்றும் பாதுகாப்பு நிறுவல்கள் பற்றிய முக்கியமான தகவல்களை இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு அனுப்பிவைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





