IPL Update – முதல் போட்டியில் மும்பை அணியை வழிநடத்தும் சூர்யகுமார் யாதவ்

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான IPL ன் 18வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது.
10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
இந்த தொடரில் சென்னை அணி தனது தொடக்க ஆட்டத்தில் வரும் 23ம் தேதி மும்பை அணியை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கிறது.
இந்த நிலையில், சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார் .
கடந்த சீசனில் 3 போட்டியில் மும்பை தாமதமாக பந்துவீசிய காரணத்தால் அணியின் கேப்டன் பாண்டியாவுக்கு முதல் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மும்பை கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார் .
(Visited 2 times, 1 visits today)