IPL Update – மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து தென் ஆப்பிரிக்க வீரர் விலகல்

ஐபிஎல் 2025ம் ஆண்டு சீசன் வருகிற 22ந்தேதி தொடங்க இருக்கிறது. இதில் விளையாடும் 10 அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த லிசாட் வில்லியம்ஸ் காயம் காரணமாக விலகியுள்ளார்.
அவருக்குப் பதிலாக மற்றொரு தென்ஆப்பிரிக்கா வீரரான கார்பின் போஸ்ச்சை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்துள்ளது.
கார்பின் போஸ்ச் தென்ஆப்பிரிக்கா அணிக்காக ஒரேயொரு டெஸ்ட், இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால், 86 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
(Visited 3 times, 1 visits today)