விளையாட்டு

IPL Update – பூஜையுடன் மும்பை அணியில் இணைந்த ஹர்திக் பாண்டியா

இந்தியன் பிரீமியர் லீக் 2024 டி20 கிரிக்கெட் தொடர் இம்மாதம் 22-ம் தேதி துவங்க இருக்கிறது.

2024 ஐ.பி.எல். தொடருக்காக அணிகள் தங்களது பயிற்சியை துவங்கியுள்ளன. இது தொடர்பாக அந்தந்த அணிகள் சார்பில் சமூக வலைதள பதிவுகள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றன.

அந்த வரிசையில், மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது. 2024 ஐ.பி.எல். தொடரில் மும்பை அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா களமிறங்க இருக்கிறது.

இந்த நிலையில், ஐ.பி.எல். தொடரில் மீண்டும் மும்பை அணிக்கு திரும்பியுள்ள ஹர்திக் பாண்டியா டிரெசிங் ரூமில் தேங்காய் உடைத்து, பூஜை செய்துள்ளார்.

இது தொடர்பான வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் வெளியிட்டு உள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

வீடியோவின் படி டிரெசிங் ரூமிற்குள் வரும் ஹர்திக் பாண்டியா விளக்கேற்றி, பூஜையை துவங்குகிறார். பிறகு, மும்பை அணியை சேர்ந்த வெளிநாட்டவர் ஒருவர் தேங்காய் உடைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

KP

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!