விளையாட்டு

ஐபிஎல் போட்டிகள் மே 17 முதல் மீண்டும் தொடக்கம்

இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் வரும் 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே போர் பதற்​றம் நில​வியதை தொடர்ந்து கடந்த 8-ம் தேதி 18-வது ஐபிஎல் தொடர் பாதி​யிலேயே நிறுத்​தப்​பட்​டது. அன்​றைய தினம் பஞ்​சாப் – டெல்லி அணி​கள் இடையி​லான ஆட்​டம் தரம்​சாலா​வில் நடை​பெற்று கொண்​டிருந்​தது. 10.1 ஓவர்​களில் இந்த ஆட்​டம் நிறுத்​தப்​பட்டு மைதானத்​தில் இருந்த ரசிகர்​கள் பாது​காப்​பாக வெளி​யேற்​றப்​பட்​டனர். இதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடர் ஒரு​வார காலத்​துக்கு நிறுத்தி வைக்​கப்​படு​வ​தாக பிசிசிஐ அறி​வித்​தது.

இந்த நிலையில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் வரும் 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்க இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. மத்திய அரசு மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் ஆலோசித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வரும் 17ஆம் தேதி முதல் எஞ்சியிருக்கும் போட்டிகளை ஆறு இடங்களில் நடத்துவது என்றும், ஜூன் 3ஆம் தேதி இறுதிப் போட்டியை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ப்ளே ஆப் போட்டிகளுக்கான தேதிகள்

குவாலிஃபையர் 1 – மே 29
எலிமினேட்டர் – மே 30
குவாலிஃபையர் 2 – ஜூன் 1
ஃபைனல் – ஜூன் 3

போட்டிகள் நடக்கும் ஆறு இடங்கள் எவை என்பது குறித்த தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ