IPL Match 59 – சென்னை அணி தோல்வி
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில், சாய் சுதர்சன் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர்.
தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் -சாய் சுதர்சன் சதம் அடித்தனர். சாய் சுதர்சன் 103 ரன்னிலும் சுப்மன் கில் 104 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 231 ரன்கள் குவித்தது. சென்னை அணி தரப்பில் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரகானே – ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். 1 ரன் எடுக்க ஆசைப்பட்டு 1 ரன்னில் ரச்சின் அவுட் ஆனார்.
உடனே ரகானேவும் 1 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார்.
இதனால் சிஎஸ்கே அணி 10 ரன்னில் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனை தொடர்ந்து டேரில் மிட்செல் மற்றும் மொயின் அலி ஜோடி சேர்ந்து அணியை மீட்டனர்.
இருவரும் அதிரடியாக விளையாடி அரை சதம் விளாசினர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் குவித்தது.
டேரில் மிட்செல் 63 ரன்னிலும் மொயின் அலி 56 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து வந்த துபே 21, ஜடேஜா 18, சாண்டனர் 0 என வெளியேறினர்.
இதனால் சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் அணி தரப்பில் மோகித் சர்மா 3 விக்கெட்டும் ரஷித் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.