IPL Match 57 – கொல்கத்தாவின் PlayOff வாய்ப்பை தடுத்த சென்னை

ஐ.பி.எல். தொடரின் 57வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.
அடுத்து இறங்கிய உர்வில் படேல் 11 பந்தில் 4 சிக்சர் உள்பட 31 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அஷ்வின் 8 ரன்னும், ஜடேஜா 19 ரன்னும் எடுத்தனர்.
அதிரடியாக ஆடிய பிரேவிஸ் 25 பந்தில் 4 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 52 ரன்கள் குவித்து வெளியேறினார்.
6வது விக்கெட்டுக்கு ஷிவம் துபேவுடன் எம்.எஸ்.தோனி இணைந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது.
இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.4 ஓவரில் 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இது சிஎஸ்கே அணியின் 3வது வெற்றி ஆகும். கொல்கத்தாவுக்கு கிடைத்த 6வது தோல்வி இதுவாகும்.