செய்தி விளையாட்டு

IPL Match 56 – Playoff தகுதிக்காக போராடும் டெல்லி அணி வெற்றி

ஐ.பி.எல். போட்டியில் இன்று டெல்லியில் நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ்- சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக போரல் 65 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் – பட்லர் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் முதல் பந்தை பவுண்டரி விளாச 2 பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த சாம்சன் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார்.

மெதுவாக விளையாடிய பட்லர் 17 பந்தில் 19 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ரியான் பராக் சாம்சனுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர்.

தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம்சன் அரைசதம் விளாசினார். தடுமாற்றத்துடன் விளையாடிய பராக் 22 பந்தில் 27 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

அதனை தொடர்ந்து தனி ஆளாக போராடிய சாம்சன் 86 ரன்னில் அவுட் ஆனார். இந்த அவுட் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. அதற்கு சாம்சன் ரீவ்யூ கேட்டார். ஆனால் 3-வது நடுவர் அதனை அவுட் கொடுத்ததால் ரீவ்யூ எடுக்க முடியாது என கூறினர்.

இதனை தொடர்ந்து அதிரடி காட்டிய சுபம் துபே 12 பந்தில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி வரை போராடிய பவல் 13 ரன்னில் போல்ட் ஆனார்.

இறுதியில் ராஜஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டெல்லி அணி தரப்பில் கலீல் அகமது, குல்தீப் யாதவ், முகேஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!